தஞ்சையில் முழு ஊரடங்கு; வெறிச்சோடிய நகரம்

தஞ்சையில் முழு ஊரடங்கு காரணமாக, நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2022-01-16 04:00 GMT

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்ப்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 85 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கடைகளும் அமைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காட்சியளிகிறது. அதன் பருந்து பார்வை காட்சிகளை தற்போது காணலாம்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு என மாவட்டம் முழுவதும் அத்தியாவசியக்கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 85 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசியமின்றி வெறியே சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.

Tags:    

Similar News