4,500 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தகவல்

4,500 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுவுள்ளதாகவும் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-04 12:45 GMT

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்றுஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மருத்துவ மருத்துமனையில் சுமார் 4,500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என்றும், தஞ்சை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் 13 மருத்துவமனைக்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர தேவைக்கு கட்டுப்பாட்டை அறை எண் 1077 என்ற எண்ணை பயன் படுத்திக்கொள்ளாலாம் என்றவர். பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவர் ஊசி மருந்து தேவையான அளவு கையிருப்பில் உள்ளது, தேவைப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது. மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிக்குமார், கண்காணிப்பாளர் மருது.துரை உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News