என் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-07-19 08:15 GMT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். 

மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், என் பெயரை பயன்படுத்தி சிலர் தொலைபேசி வழியாக அழைத்து வருகின்றனர். அவர்கள்  குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துவதாகவும்  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டு காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர், பெயரினை பயன்படுத்தி ஏதேனும் அழைப்புகள் வந்தால் எவரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

அவ்வாறு வரும் அழைப்புகள் குறித்து உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரிடையாக தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரை தவறாக பயன்படுத்தி அவர்களின் நேர்மைக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News