பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்

இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் தயாரித்த இயந்திரம் மூலம் தேங்காயிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்படுகிறது

Update: 2021-09-27 06:00 GMT

 நாட்டில் முதலாவதாக  பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தஞ்சை மாரியம்மன் கோயிலில் மத்திய இணையமைச்சர் பிரகலாத் சிங்  தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் முதல்முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கம் திட்டத்தை தஞ்சாவூரில்  மத்திய இணையமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டேல் 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தஞ்சை வந்தடைந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தஞ்சை மாரியம்மன் கோயிலில் தொடங்கி வைத்தார். இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் சார்பில் பிரத்தியேக இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம், தேங்காயில் இருந்து நீர் பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.  இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் ஆகும். இந்தியாவில் முதல்முறையாக இந்தத் திட்டத்தினை இன்று இணையமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களில் இந்த திட்டம்  விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News