ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய சிட்டி யூனியன் வங்கி.

சிட்டி யூனியன் வங்கி தஞ்சாவூர் மருத்துவமனைகளுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Update: 2021-05-17 13:45 GMT

சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் தஞ்சாவூர் மருத்துவமனைகளுக்கு ரூ1 கோடி மதிப்பிலான 100 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை நன்கொடையாக வழங்கியது

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் கொரோனா சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைகளுக்கு ரூ1 கோடி மதிப்பிலான 100 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வங்கி நிர்வாகத்தினரிடமிருந்து இக்கருவிகளை முறைப்படி பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், அவற்றை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், "சிட்டி யூனியன் வங்கியின் சார்பில் நமக்கு ரூ1 கோடி மதிப்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் மூலம், சிலிண்டர் உதவி இல்லாமல், நேரடியாக காற்றிலிருந்து 100 பேருக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க முடியும். ஸ்பிளிட்டர் பயன்படுத்தி 200 நபர்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்," என்றார்.

மேலும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். இதில் 75 கருவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 15 கருவிகள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், 10 கருவிகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News