தஞ்சையில் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை- ஆர்வமுடன் பொதுமக்கள் பயணம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கி இருக்கிறது; வழிகாட்டுதல்களை பின்பற்றி, ஆர்வமுடன் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

Update: 2021-07-05 02:34 GMT

கொரோனா தொற்று பரவல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.  பின்னர் தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில், கடந்த வாரம் பேருந்து சேவை தொடங்கியது.

இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகம் இருந்த மாவட்டங்களில், இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, 40 நாட்களுக்கு பிறகு, இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில், பேருந்து சேவை தொடங்கியது.

மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 10 பணிமனைகளில், 300 புறநகர் பேருந்துகளும், 213 நகர பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளன. பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக, நேற்று பணிமனைகளில் பேருந்து முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News