ஆயுத பூஜை: வாழை கன்று, மாவிலை தோரணம் பூக்களின் விலை சற்று உயர்வு

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முன்னிட்டு வாழை கன்று பூக்களின் விலை உயர்ந்த போதிலும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்.

Update: 2021-10-14 08:45 GMT

வெறிச்சோடி காணப்படும் தஞ்சாவூர் கடை வீதி. 

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தஞ்சை முக்கிய சந்தையான கீழவாசல் சரபோஜி மார்க்கெட் பகுதியில் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் வெறிச்சோடி காணப்படுகின்றது. ஆயுத பூஜையை முன்னிட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பூஜைக்கு தேவையான வாழைக்கன்றுகள், மாவிலை குருத்தோலை தோரணம், பூக்கள், பழங்கள், பூசணிக்காய் உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாழை கன்றுகள் மற்றும் மாவிலைத் தோரணம் சேர்த்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. செவ்வந்தி பூ மற்றும் அரளி, ரோஜா உள்ளிட்டவை கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கதம்பம் பூக்கள் ஒரு முழம் 30 ரூபாய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொரிகடலை, பொட்டுக்கடலை பொறுத்தவரை பத்து ரூபாய், இருபது ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்டவற்றுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பூசணிக்காய் 50 ரூபாய் 60 ரூபாய் என ரகத்திற்கு தகுந்தவாறு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வியாபாரம் மந்தமாக உள்ளதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News