தஞ்சையில் 2 வீடுகளில் பணம், தங்க நகை என ரூ.5.93 லட்சம் பொருட்கள் கொள்ளை

தஞ்சையில் 2 வீடுகளில் பணம், தங்க நகை என ரூ.5.93 லட்சம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-01-19 12:04 GMT

தஞ்சை புதுக்கோட்டை ரோடு தெய்வா நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (55). இவர் குருங்குளம் சர்க்கரை ஆலை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம், 27 பவுன் தங்க நகைகளை காணவில்லை.

வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயராமன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் தஞ்சை மாதாகோட்டை மேல தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் (51) விவசாயி.சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம். இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலை கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News