கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

Update: 2021-11-29 15:30 GMT

மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. உலக புகழ்பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அதேபோல் இந்தாண்டு இரண்டாவது கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News