தஞ்சை பெரிய கோவிலில் வாராஹிக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்று வரும், ஆஷாட நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2021-07-18 14:00 GMT

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்று வரும், ஆஷாட நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும், இதில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். கடந்த 9ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய, ஆஷாட நவராத்திரி விழாவில், தினமும் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், மாதுளை, நவதானியம் போன்ற பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்றன . விழாவின் பத்தாம் நாளான இன்று காய்கறி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆஷாட நவராத்திரியின் நிறைவு நாளான நாளை வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் கோவிலுக்குள் உற்சவர் புறப்பாடும் நடைபெற உள்ளது. அனைவரும் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News