சாலை மறியல் போராட்டம்-அரசு ஊழியர்கள் கைது

Update: 2021-02-02 08:30 GMT

தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு 50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கோதண்டபாணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். முதலமைச்சர் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்களை அழைத்து பேசாமல் லெட்டர் பேடு சங்கங்களிடம் பேசிவி ட்டு ஒட்டு மொத்த சங்கத்திடமும் பேசியது போல் தோற்றத்தை ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது என்றனர்.

Tags:    

Similar News