காவிரி டெல்டா மாவட்டங்களில் களைகட்டிய பொங்கல் திருவிழா

காவிரி டெல்டா மாவட்டங்களில், வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2022-01-14 03:15 GMT

தைத்திங்கள் முதல் நாளான இன்று உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு மற்றும் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்ததால் குறுவை, சம்பா, தாளடி என முப்போக விளைச்சல் அமோகமாக இருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அறுவடை செய்த புது நெல்லில், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வயல்வெளிகளில் விவசாயிகள் புது அடுப்பில், புதுப்பானை வைத்து மஞ்சள் கட்டி பொங்கல் வைத்து கொண்டாடினர். ஆண்டு முழுவதும் நடைபெறும் உழவுத் தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் டெல்டாவில் பொங்கல் விழா களைகட்டியுள்ளது.

Tags:    

Similar News