ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையம்: எம்எல்ஏ திறந்து வைப்பு

தென்காசியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையத்தை பழனி நாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2022-01-20 04:13 GMT

தென்காசி நகராட்சி கீழப்புலியூரில் பிரதம மந்திரி ஜன்விகாஸ் கரிய கிராம் திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையம் கட்டப்பட்டது. இதனை  பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்துவைத்து குத்து விளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, வட்டார மருத்துவ அலுவலர் முகமது இப்ராகிம், டாக்டர் ஜன்னத்துல் பிர்தௌஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு, நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், ஆய்வாளர் சேகர், நகர காங்கிரஸ் தலைவர் ஆனந்த பவன் காதர் மைதீன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், வட்டார தலைவர் குற்றாலம் பெருமாள், சுப்பையா பிரபாகரன், இளைஞரணி சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News