சுரண்டையில் ஒரு வழி பாதையால் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

சுரண்டையில் ஒரு வழி பாதையில் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-24 07:12 GMT

ஒரு வழி பாதையில் எதிரே வரும் தனியார் பேருந்து.

சுரண்டையில் ஒரு வழி பாதையில் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகவும், தென்காசி மாவட்டத்தின் இதயமாகவும் சுரண்டை திகழ்கிறது. இங்கு உள்ள காய்கறி சந்தையில் இருந்து ஏராளமான காய்கறிகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. அதி நவீன பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட ஏராளமான மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. அதிகமான அரிசி ஆலைகளும், செங்கல் சூளைகளும் இங்கு உள்ளது.

சுரண்டையை சுற்றியுள்ள பாட்டா குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், சாம்பார் வடகரை, கீழ சுரண்டை உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பள்ளி,கல்லூரி செல்வதற்காகவும், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும், மருத்துவ தேவைகளுக்காக வும் சுரண்டைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சிறிய பேருந்து நிலையமாக இருந்த பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த இங்குள்ள வர்த்தர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது இடத்தை கொடுத்து விரிவு படுத்தினர். மேலும் இங்கு தீயணைப்பு நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றகள் அமைந்துள்ளது.

இங்கு செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதேபோல் இப்பகுதியை தனி வட்டமாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. சுரண்டை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் ஒருவழிப்பாதையை அமல்படுத்தி உள்ளனர்.

சுரண்டை பஸ் நிலை யத்திற்கு ஒரு வழி பாதையில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகிறது.

மேலும் அண்ணா சிலை பகுதியில் வாகனங்கள் திரும்புவதற்கு சிரமமாக இருப்பதால் சங்கரன்கோவில் ரோட்டில் வரும் வாகனங்கள் சாந்தி நர்சிங் ஹோம் முன்பு உள்ள ஒரு வழி பாதையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதிர்ப்பாதையில் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை எடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News