தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கார்சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-05-28 06:00 GMT

தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கார்சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் இருந்து வரும் நீரானது சிற்றாறுக்கும், கீழப்புலியூர் பெரியகுளத்திற்கும், அதனை தொடர்ந்து உள்ள பல குளங்களுக்கும் செல்கிறது. சிற்றாறு-க்கும் ஏப்ரல் 1 மே மாதங்களிலும், குற்றால பருவ காலம் தொடங்கும்.

ஜுன் மாதம் முதல் கீழப்புலியூர் பெரிய குளத்திற்கும் தண்ணீர் விடப்படுகிறது. கீழப்புலியூர் பெரியகுளம் நிரம்பினால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும். தற்போது தென் மேற்கு பருவ காலம் தொடங்கியிருப்பதால் குற்றால அருவியில் இருந்தும், மழை நீரும் கீழப்புலியூர் பெரிய குளத்திற்கு வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் கீழப்புலியூர் பெரிய குளத்தில் சுமார் 10 வருடத்திற்கும் மேலாக பராமரிக்கப்படாமல் உள்ள மதகில் பொதுப்பணித்துறையினர் அவசரம் அவசரமாக பராமரிப்பு பணியை துவங்கியுள்ளனர். குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய சமயத்தில் மதகு பராமரிப்பு பணி செய்தால் குளத்தில் நீர் நிரப்புவது கேள்விக்குறியாகிவிடும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் , இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பெய்த மழையால் குளத்தின் கரை சேதமடைந்து, குளத்திற்கு வரும் நீர் முற்றிலும் அருகிலுள்ள வயல்வெளியில் வீணாக சென்று சிற்றாரில் போய் கலக்கிறது. மேலும் சுந்தரபாண்டியபுரம் - கீழப்புலியூருக்கும் உள்ள பிரதான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு வருகின்ற சேமித்து வைக்காவிட்டால் தற்போது பயிர் செய்ய உள்ள கார் சாகுபடி முற்றிலும் தடைபடும் நிலை ஏற்படும் என்றும். இந்த குளத்தை முறையாக தூர் வாராமல் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதிகளிலும் உள்ள மருத்துவம், இறைச்சி உள்ளிட்ட அனைத்து கழிவுகளுடன் சுமார் 4 அடி ஆழத்திற்கு தேங்கியுள்ளது.

எனவே குளத்தை முழுமையாக தூர்வார வேண்டும், அலட்சியமாக செயல்பட்டு தண்ணீரை வீணாக்கி வரும் பொது பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News