பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
பட விளக்கம்: இருசக்கர வாகனத்தை திருடியதாக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ள பாரூக் நியாஸ்
தென்காசியில் பெணணின் இருசக்கர வாகனத்தை திருடி நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்திய திருடன் கைது
தென்காசியில் உள்ள அப்துல் கலாம் நகர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா என்பவரது மனைவி வகிதா கடந்த வாரம் எட்டாம் தேதி காய்கறி வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தென்காசி தினசரி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் வகிதாவின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தென்காசி காவல் நிலையத்தில் வகிதா புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் வகிதாவின் இருசக்கர வாகனத்தை தள்ளி செல்வது போன்ற காட்சி பதிவாகியது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் தென்காசி படிக்கட்டு பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பத்துகுமுகமது என்பவரது மகன் பாரூக்நியாஸ் (வயது 50) என்பதும் இவர் அவரது தந்தையின் பால் பண்ணையில் பணிபுரிந்து வருவதாகவும் இருசக்கர வாகனத்தை திருடியது பாரூக் நியாஸ்தான் எனவும் காவல்துறையினர் உறுதி செய்தனர். நேரில் சென்று வீட்டில் பார்த்த பொழுது அங்கு மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டையே மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த தென்காசி காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை மீட்டனர். தென்காசி தினசரி மார்க்கெட் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சியானது தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.