தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி தேர்வு

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த ஓட்டெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழ்செல்வி வெற்றி.

Update: 2021-10-23 01:54 GMT

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்செல்வி.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளை தி.மு.க.வும், 3 வார்டுகளை காங்கிரசும், ஒரு வார்டை ம.தி.மு.க.வும் கைப்பற்றி இருந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 12-வது வார்டு உறுப்பினர் தமிழ்செல்வி, 6-வது வார்டு உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடையே போட்டி நிலவியது.

இந்நிலையில் இன்று தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது தலைவர் பதவிக்கு தமிழ்செல்வி, கனிமொழி ஆகிய இருவருமே மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில் தமிழ்செல்விக்கு 8 பேர் ஆதரவு தெரிவித்தனர். கனிமொழிக்கு 5 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவை பெற்ற தமிழ்செல்வி தலைவராக வெற்றி பெற்றார். அவருக்கு சக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News