தென்காசி மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி.

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை, எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-27 00:30 GMT

 நீர்நிலைகளை ஆய்வு செய்த, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு  ரெட் அலார்ட் (Red Alert) கொடுக்கப்பட்டுள்ளது.மழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பிய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நிலை குறித்து,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், நேற்று   நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆற்றோரப்பகுதியில் வசிப்போருக்கு, அறிவுரைகள் வழங்கப்பட்டு, தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அணைகளிலும் காவலர்களை நிறுத்தப்பட்டுள்ளதோடு, குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து சென்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும்,  மீட்புக்குழு காவலர்கள், மாவட்டத்தின் அனைத்து முக்கியமான இடங்களிலும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப்பணிக்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா  எனவும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News