தென்காசியில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

Road Safety Awareness Rally தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு வாரவிழா அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகிறது.

Update: 2024-02-09 15:15 GMT

பட விளக்கம்: சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை மோட்டார வாகன ஆய்வாளர் கனகவல்லி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

Road Safety Awareness Rally

சீட் பெல்ட் அணிவதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்காசியில் நடைபெற்ற விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.இந்தியாவில் ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாத விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் சாலை விபத்துகளில் மரணம் ஏற்பட்டும், பலர் உடல் ஊனமாகியும் அவதியுற்று வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் தென்காசியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தென்காசி போக்குவரத்து காவல் நிலையம் இணைந்து சீட் பெல்ட் அணிவதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.

தென்காசி யானை பாலத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி கொடியை செய்து தொடங்கி வைத்தார் பிரதான சாலைகளில் ஊர்வலமாக வந்து தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து தொடர்ச்சியாக ஊர்வலமாக சென்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

Tags:    

Similar News