தென்காசியில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை

தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

Update: 2022-05-02 14:33 GMT

தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி பிறை பார்த்து அடுத்த 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி சவூதி அரேபியாவில் பிறை பார்த்து ஹிலால் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல் அமைப்பினர் 30 நாட்கள் நோன்பிருந்து இன்று ரமலான் சிறப்பு தொழுகையை நடத்தினர். உலகில் வாழக்கூடிய அனைத்து மக்களும் கொரோனா போன்ற பெரும்நோய் தொற்றில் இருந்து காக்கப்பட வேண்டும் என்பதற்காக சிறப்பு தொழுகையை நடத்தினர். இந்த தொழுகைக்கு தென்காசி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மசூத் அலி தலைமை தாங்கினார். இந்த தொழுகையில் ஆண்கள் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News