தமிழகத்திற்கு நீட் விலக்கு தேவை என ரஜினி ஆளுநரிடம் வலியுறுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி

தமிழக மக்களுக்கு உழைக்க தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தன்னிடம் கூறியதாக ரஜினி கூறியுள்ளார்.

Update: 2022-08-10 02:00 GMT

செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

தென்காசி மாவட்டத்தில் 75 ஆவது இந்திய சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி காங்கிரஸ் மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரை நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர் கூறுகையில், மக்களுக்கு வழங்கப்படும் இலவசம் குறித்து தவறான கருத்து உள்ளது. விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவில்லை எனில் இந்தியாவின் உணவு உற்பத்தி குறைந்துவிடும். எனவே இலவசத்தால் நாடு கெட்டுபோகும் என்பது தவறாக கருத்து என தெரிவித்தார். தமிழக மக்களுக்கு உழைக்க தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தன்னிடம் கூறியதாக ரஜினி கூறியுள்ளார். அது உண்மை எனில், ஆளுநரிடம் தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும், தமிழகத்திற்கான வரி வருவாய் அதிகப்படுத்தி தரவேண்டும் என இரண்டு விஷயங்களை கேட்டிருந்தால் சூப்பர் ஸ்டார் என அவரை கொண்டாடும் தமிழக மக்களுக்கு அவர் செய்யும் கைமாறாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News