அரசு வழங்கும் இலவச சேலைக்கான உற்பத்தி நூல் தரமில்லை: நெசவாளர்கள் ஆட்சியரிடம் மனு

Govt Employees News Today -அரசு வழங்கும் இலவச சேலைக்கான உற்பத்தி நூல் தரமில்லை நெசவாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-09-20 05:08 GMT

அரசு வழங்கும் இலவச சேலைக்கான உற்பத்தி நூலை தரமாகவும், தொடர்ச்சியாகவும் வழங்க கோரியும் கூலி உயர்வு கேட்டும் சுப்புலாபுரம் பகுதி நெசவுத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Govt Employees News Today -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் பகுதியில் சுமார் 5000 குடும்பத்தினர் நெசவுத் தொழிலை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச சேலைக்கான உற்பத்தி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு கடந்த எட்டு மாத காலமாக சரிவர நூல் தொடர்ச்சியாக வழங்கப்படாமலும், நூலின் தரம் மிகவும் தரமற்று இருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக நூல் வழங்காததால் தங்களது குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்க கோரியும் நூலில் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும், மேலும் நெசவு கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெசவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News