போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாமகவினர் எஸ்பி., ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தேன்காசியில் போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாமகவினர் எஸ்பி., ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2022-08-01 14:18 GMT

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக தடை செய்யக்கோரி பாமகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. அதன்படி கடந்த 30-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனையின்படி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை ஒழிப்பது குறித்த மனு வழங்கப்பட்டது.

இதே போல் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆகாஷிடமும் மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது. அரிகரன், வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரோகி தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News