சுரண்டை செண்பக கால்வாயில் தென்காசி எம்.எல்.ஏ. ஆய்வு

சுரண்டை செண்பக கால்வாயில் தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-16 01:00 GMT

சுரண்டை செண்பக கால்வாயில் ஆய்வு மேற்கொண்ட, தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.  பழனி நாடார்.

தென்காசி, மாவட்டம் சுரண்டை பேரூராட்சி செண்பக கால்வாய் அருகில்,  பொட்டல் மாடசாமி கோவில் வடபுறம்,  பொது கழிப்பிடம் உள்ளது. இதை,  12, 13, 14, 16, 17 வார்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், செப்டிக் டேங்க் உடைந்து கால்வாயில் கலந்து சென்று துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு  வந்தது. அத்துடன், செடி, புதர், மரங்கள் வளர்ந்து மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடாரிஉடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு பேரூராட்சி இன்ஜினியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம், செப்டிங் டேங்க் சுத்தம் செய்து தர உத்தரவிட்டார். இதனால் சுகாதாரப் பணியாளர்கள் களத்தில் இறங்கி,  செடி கொடி மரங்கள் முட்புதர்கள் ஆகியவற்றை அகற்றி துப்புரவு செய்தனர்.

எம்.எல்.ஏ. உடன், இன்ஜினியர் கோபி, கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயபால், தி.மு.க. கவுன்சிலர் அன்னபிரகாசம்,  காங்கிரஸ் பிரமுகர் சமுத்திரம், விவசாய சங்க செயலாளர் சமுத்திர பாண்டி, வக்கீல் சின்னததம்பி, தேவேந்திரன், டயர் கம்பெனி செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News