பாரம்பரியமிக்க கடையம் கோவிலுக்கு தேர் வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை

கடையத்தில் உள்ள பாரம்பரியமிக்க கோவிலுக்கு தேர் வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-04-24 17:06 GMT

மடவார் வளாகத்தில் அமைந்துள்ள திருக்கருத்தீஷ்வரர் திருக்கோயில் 

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள திருக்கருத்தீஷ்வரர் திருக்கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெரும் கோவிலாகும். கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்கோவில்.

மேலும் இந்த பகுதி கிராம மக்களால் வழங்கப்படுகிற தெய்வமாகவும் இது விளங்கி வருகிறது. அதேசமயம் கிராமப்புற மக்களின் திருமணங்கள் பெரும்பாலும் இந்த ஆலயத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆலயம் பழுதடைந்து காணப்படுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பழமை வாய்ந்த கோவில்களை கண்டுபிடித்து அதற்கெல்லாம் குடமுழுக்கு விழா நடத்தி வருகிறார். ஆகவே, எங்கள் ஊர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்றும், பக்கத்தில் இருக்கிற அனைத்து கிராமத்திற்கும் இங்கே இருக்கிற தேர் தான் பவனி வந்து கொண்டிருந்தது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கத்து கிராமங்களுக்கு எல்லாம் செல்லாமல் பராமரிக்கப்படாமல் முழுமையாக தேர் சேதம் அடைந்திருக்கிறது. எனவே திருக்கோவிலுக்கு ஒரு தேர் வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கிராமத்து மக்கள்  வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு அந்த கோவிலில் ஆய்வு செய்த திமுக நிர்வாகிகள், இது குறித்து தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் கோவிலினுடைய வரலாற்றைச் சொல்லி கோவில் பராமரிப்பு மற்றும் குடமுழுக்கு நடத்த வழிவகை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

Tags:    

Similar News