விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள். குளிக்க அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.

Update: 2021-07-24 06:14 GMT

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதித்திருப்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை தொட்டு தண்ணீர் விழுவதால் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மற்ற அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்றாலும் பரவாயில்லை பார்த்து செல்வதற்காவது அனுமதியுங்கள் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

Similar News