பாவூர் சத்திரம் அருகே மேல மெஞ்ஞானபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

பாவூர் சத்திரம் அருகே மேல மெஞ்ஞானபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-05 03:28 GMT

பாவூர் சத்திரம் அருகே மேல மெஞ்ஞானபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், மேலமெஞ்ஞானபுரம் அஜீத்குமார் நற்பணி மன்றம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 54 வது இலவச கண் புரை பரிசோதனை முகாம் மேலமெஞ்ஞானபுரத்தில் நடைபெற்றது.

சேகரத்தலைவர் டேனியல் தனசன் தலைமை வகித்தார் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவர் முனைவர் அரிமா த.அருணாச்சலம்  முன்னிலை வகித்தார். மாவட்ட கண்தான தலைவரும், பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனருமான இளங்கோ  தொகுப்புரை ஆற்றினார். ரத்ததான மாவட்டத்தலைவர் அரிமா திருமலைகொழுந்து வரவேற்றார்.

சபைகுரு ராஜகுமார் சாமுவேல் பங்கேற்று, முகாமினை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் டாக்டர்கள் வனிசோகர், அபிஷேக் மற்றும் குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். 135 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 35 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை மேலமெஞ்ஞானபுரம் தல அஜீத்குமார் நற்பணி மன்றத்தினர், பாவூர்சத்திரம் நேரு பாரா மெடிக்கல் கல்லூரி செவிலியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News