இலஞ்சி குமாரகோவிலில் சித்திரை திருவிழா திருத்தோட்டம்

திருவிலஞ்சி குமாரசுவாமி கோவிலில் திருதேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-04-22 13:47 GMT

திருவிலஞ்சி குமாரசுவாமி கோவிலில் திருதேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் உள்ள திருவிலஞ்சி குமாரசுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான சித்திரைத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது .

நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் திருவிலஞ்சி குமாரர் பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா வந்த நிலையில், 7-ம் திருநாள் அன்று நடராஜருக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 8-ம் திருநாள் அன்று பச்சை சாத்தி தாண்டவ தீபாரணை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

குறிப்பாக, ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்து வரும் நிலையில், சிறப்பு அலங்கார தோற்றத்தில் காட்சியளித்து வரும் திருவிலஞ்சி குமாரரை பக்தர்கள் தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும், தேரோட்ட நிகழ்வுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. தேரோட்ட நிகழ்வில் தென்காசி, இலஞ்சி, செங்கோட்டை, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

Tags:    

Similar News