தென்காசி ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Shawarma Meaning in Tamil-தென்காசியில் சிக்கன் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-05-07 11:16 GMT

தென்காசியில் சிக்கன் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

Shawarma Meaning in Tamil-தென்காசியில் சிக்கன் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட நிலையில் கடைகளில் இருந்து பழைய இறைச்சிகள் பறிமுதல் செய்யபட்ட்ட நிலையில் உணவு மாதிரி பரிசோதனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் சசீதீபா பேட்டி.

கேரளாவில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகைவகையில் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் சசீதீபா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாதிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட நியமன அதிகாரி சசீதீபா கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் சிக்கன் சவர்மா கடைகள் குறைவாகவே உள்ளது. இதில் கடைகளில் சோதனை செய்ததில் சின்ன சின்ன குறைபாடுகள் இருந்ததாகவும் அவை குறித்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் பழைய இறைச்சிகள் பறிமுதல் செய்யபட்டதாகவும், உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News