தென்காசியில் போலீசார் சார்பில் முதல் வீர வணக்க நாள் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் காவலர் வீர வணக்கநாள் நிகழ்ச்சி முதன் முறையாக இன்று நடந்தது.

Update: 2021-10-21 11:58 GMT
தென்காசி காவலர் நினைவு ஸ்தூபியில் போலீஸ் எஸ்.பி. கிருஷ்ணராஜ் மலர் வளையம் வைத்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினார்.

வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.தென்காசி மாவட்டம் ஆய்குடி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக நினைவு நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக துவக்கப்பட்ட 9 மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி மாவட்டத்தில் தான் இதுபோன்ற நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.வீரவணக்க நாளான இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நடுகல் பீடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News