பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-01 06:18 GMT

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரவல் கலந்தாய்வில் நீடு போஸ்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயசித்ரா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருபா சம்பத் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் நல்லையா வரவேற்றார்.மாவட்ட துணைத்தலைவர் மாரித்துரை, மாவட்ட இணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் திருமலைக்குமார், வீரசெல்வன், ரத்தினகுமார், கருப்பசாமி, சங்கரநாராயணன், ஸ்ரீதேவி, சுகுமார், மாசிலாமணி, அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News