மக்களுக்கு வழங்கிய கரும்புகளை, கொள்முதல் செய்ததில் ஊழல் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு

Sugarcane in Tamil- பொங்கலுக்கு, வழங்கப்பட்ட கரும்பு கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-01-25 02:16 GMT

 கட்சி நிர்வாகிகளை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.

Sugarcane in Tamil- தென்காசி மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை வகித்தார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முன்னிலை வகித்தார்.  இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில், தமிழக அமைச்சர்கள், 'பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க' என்று முழக்கத்துடன் காலையில் எழுகின்றனர். ஏனென்றால், கரும்பு கொள்முதல் மூலம் ஊழல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. கடந்த 60 நாட்களில் 140 கொலைகள் நடந்த நிலையில்,  தமிழ்நாடு இதுவரை கண்டிராத மோசமாக அரசாக உள்ளது. தமிழக ஆளுநரையே ஒருமையில் பேசிய முதல்வர், அதுகுறித்து வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில் இந்த அரசு குறித்த அவநம்பிக்கையில், மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனையில் திருடிய செங்கலை ஒப்படைத்துவிட்டு மற்றவை குறித்து பேசலாம்,  என்றார். 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News