அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் : விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்ட நிலையிலும் துறை சார்ந்த அதிகாரிகள் எந்தவித ஆய்வு மேற்கொள்ளாத நிலை இருந்து வருகிறது

Update: 2023-04-01 10:00 GMT

தென்காசியில் நடைபெற்ற விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக  ஆவேசமாக பேசிய விவசாயிகள்

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கடையநல்லூர் அடுத்து மங்களாபுரம் பகுதியில் விவசாய பாசனத்திற்கு பயன்படும் குளத்தை காணவில்லை எனவும் அதனை மீட்டு தரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் அனைத்து வட்டார விவசாயிகள் பங்கேற்ற நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் மாவட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 முதல் 60 ரூபாய் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், துறை சார்ந்த அதிகாரிகள் எந்தவித ஆய்வு மேற்கொள்ளாத நிலை இருந்து வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து கடையநல்லூர் அடுத்து மங்களபுரம் கிராமத்தில் விவசாய பாசனத்திற்கு பயன்படும் பன்னீர் பெரியகுளம், சிவசங்கர நாராயணபெரி கால்வாய் உள்ளிட்டவைகள் சில தனி நபர்களின் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குளம் மற்றும் கால் வாய்களை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் டேனி அருள் சிங் தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News