தென்காசியில் அதிமுகவினரின் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Meeting News -தென்காசியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-23 05:30 GMT

தென்காசியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

Meeting News -தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.  பிரபாகரன், கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் அண்ணாவின் வரலாற்றையும் விடியா திமுகவின் அவலங்களையும் மக்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News