அடவி நயினார் கோவில் மற்றும் குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது

அடவி நயினார் கோவில் நீர்த் தேக்கம், குண்டாறு நீர்த் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Update: 2021-10-16 13:32 GMT

தென்காசி மாவட்ட அணைகளில் நீர் வெளியேறும் காட்சி

தென்காசி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேக்கரையில் 132.5 கன அடி  கொள்ளளவு கொண்ட அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சுமார் 7500 ஏக்கர் பரப்பளவு பாசனம் பெறும் இந்த அணைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அதேபோல் செங்கோட்டை அருகே 32 கன அடி அளவு கொண்ட குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், நகர்ப்புறங்களிலும் மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News