குற்றாலம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்!

குற்றாலத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட, தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Update: 2023-03-21 06:10 GMT

குற்றாலம் கார் பார்க்கிங் பகுதி கடையில நுழைந்த மர்ம நபர் கடையை உடைத்து கடைக்குள் இருந்த பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களால் வெளியில் இருந்தவர்களை தாக்க முயற்சித்துள்ளார். சுமார் 6 மணி நேரமாக போலீசார் தீயணைப்புதுறையினர் பொதுமக்கள் என போராடி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான குற்றாலம். இங்கு சீசனின் போது கூட்டம் அலைமோதும். புத்துணர்ச்சி பெற விரும்பும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிவார்கள். மற்ற நேரங்களிலும் இங்கு மக்கள் பரவலாக வந்து செல்வார்கள். அருகாமையிலுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் குற்றாலத்துக்கு வந்து புத்துணர்ச்சி அடைந்து செல்வார். 

குற்றாலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான கார் பார்க்கிங் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று நள்ளிரவில் போதை ஆசாமி ஒருவர் புகுந்து அங்கிருந்த பாட்டில்கள், பொருட்களை அடித்து உடைக்க துவங்கியுள்ளார்.

பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் அவரைப் பிடிக்க கடைக்கு அருகே சென்ற போது கடைக்கு உள் இருந்த கண்ணாடி பாட்டில்களை வெளியே எரிந்து போலீசாரை தாக்க முயற்சித்துள்ளார்.

உடனடியாக தீயணைப்புதுறையினர் வந்து அவர்களும் பல வித நடவடிக்கைகள் எடுத்து அந்த ஆசாமியைப் பிடிக்க முயற்சித்தனர். நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாட்டில்களை கொண்டு எரிந்த வண்ணம் இருந்துள்ளார் அந்த மர்ம நபர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சு அடித்து அவரை பிடிக்க  போலீசார் முயற்சித்துள்ளனர்.

 அப்போதும் அந்த நபர் பாட்டில்களால் தாக்க முயற்சித்துள்ளார். பின்னர் அனைவரும் உள்ளே புகுந்து அவரை பிடித்தனர். உள்ளே இருந்த நபர் காயமடைந்திருந்தது அவர்களுக்கு தெரியவந்தது.  இதனையடுத்து காயமடைந்திருந்த நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

அவர் யார், எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர். பின்னர் அவரைக் குறித்த தகவல்கள் தெரியவந்தன. அவர் கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த எபின் என்பது தெரிந்தநிலையில்,  அந்த நபர் போதையில் இந்த செயலில் ஈடுபட்டாரா அல்லது மன நிலை குறைபாடுள்ளவரா என்பன உட்பட பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News