தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5க்கும் மேற்பட்டோர் கைது

Latest Crime News Today - கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெட்டூர் பகுதியைச் சேர்ந்த மகாராஜன், சுப்புகுட்டி மற்றும் முப்பிடாதி ஆகிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது.

Update: 2022-06-29 02:15 GMT

பைல் படம்.

Latest Crime News Today - தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆயிரப்பேரியைச் சேர்ந்த பார்வதி(72) மற்றும் ராமலட்சுமி (20) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கநேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெட்டூர் பகுதியைச் சேர்ந்த மகாராஜன், சுப்புகுட்டி மற்றும் முப்பிடாதி ஆகிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள பார்வதி என்பவருக்கு இதுவரை கஞ்சா விற்பனை செய்ததாக 15க்கும் மேற்பட்ட வழக்குகளும், சுப்புகுட்டி என்பவருக்கு கொலை, அடிதடி மற்றும் கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News