பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழா. காங்கிரஸார் மதிய உணவு வழங்கினர்

தென்காசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.

Update: 2021-06-10 11:48 GMT

பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸின் 71-வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.  தென்காசி மாவட்டத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சாம்பவர் வடகரை, இலஞ்சி, குற்றாலம், வடகரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆசிரமங்கள், ஆதரவற்றோர் விடுதிகளில் வசிப்போருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், செங்கோட்டை முன்னாள் வட்டார தலைவர் அந்தோணி வியாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News