சங்கரன்கோவிலில் காவலர்கள் - இந்து அமைப்பினரிடையே தள்ளுமுள்ளு! இதுதான் காரணமாம்!
கி வீரமணி கலந்துகொண்ட கூட்டத்தில் இந்து முன்னணியினர் நுழைந்து பிரச்னை செய்ததாக கூறப்படும் நிலையில் காவல்துறையினருக்கும் இந்து அமைப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு;
பட விளக்கம்: சங்கரன் கோவிலில் காவல்துறையினருக்கும் இந்து அமைப்புகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்ற போது எடுத்த படம்.
சங்கரன்கோவிலில் திராவிட கழக பொதுக்கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேச இருந்த நிலையில் கூட்டத்திற்கு எதற்கு தெரிவித்து ஹிந்து முன்னணி, மற்றும் ஐயப்ப சேவா சேவா சங்கம் உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் மண்டபத்தில் அமர்ந்து பஜனை பாடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியில் வந்த போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்கு முன்பு உள்ள கருப்புக் கொடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் இந்து முன்னணி மற்றும் ஆன்மீக அமைப்புகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் கைதாக மறுத்த அனைவரையும் குண்டு கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அப்போது இருதரப்பினருக்கும் தள்ளும் முள்ளு ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சன்னதி வீதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டு சென்றனர்.