'திமுக பாஜகவுடன் ரகசிய கூட்டணி' : எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி..!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தென்காசிக்கு வருகை புரிந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்

Update: 2024-11-04 08:02 GMT

எஸ்டிபி கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்

தவெக தலைவர் விஜயின் அரசியல் கொள்கைகள் குறித்து நாகரீகமான முறையில் விவாதங்கள் செய்ய வேண்டும் எனவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும்  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டியளித்தார்.

தென்காசியில் எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து  கொள்வதற்காக வருகை தந்தார்.

இந்த நிலையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில்,

தமிழக அரசு முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்கக்கோரியும் , முஸ்லீம் அப்பாவி ஆயுள் சிறைவசிகளை விடுதலை செய்யக்கோரியும் எதிர்வருகின்ற நவம்பர் 16 ஆம் தேதி தலைநகர் சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக கூறினார்.

தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் தனது கொள்கைகளை அறிவித்துள்ளார். ஆனால் அது தொடர்பாக நாகரிகமான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.

மேலும் திமுக அரசு அறிக்கை அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். சமூக நீதி அரசு என்று பெயர் வைத்துக் கொண்டு பாஜகவோடு மறைமுக கூட்டணியில் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் திமுக அரசு நிர்வாகத்தில் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News