பிரபல பார்டர் புரோட்டா கடை குடோனுக்கு சீல்..

Border Parotta Kadai Sengottai-வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் இந்தக் கடைக்கு வந்து தான் புரோட்டோ மற்றும் பிரியாணி அயிட்டங்களை சாப்பிட்டு மகிழ்வார்கள்.

Update: 2023-02-11 07:57 GMT

Border Parotta Kadai Sengottai

Border Parotta Kadai Sengottai-செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் செயல்பட்டு வரும் பிரபல ரஹ்மத் புரோட்டா கடையில் உள்ள குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூரில் செயல்பட்டு வருகிறது பிரபலமான ரஹ்மத் புரோட்டாக் கடை. இந்தக் கடைக்கு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கிளைகள் உள்ளது. சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் இந்தக் கடைக்கு வந்து தான் புரோட்டோ மற்றும் பிரியாணி அயிட்டங்களை சாப்பிட்டு மகிழ்வார்கள்.

இந்நிலையில் இக்கடையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக கூறி இணையதளம் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று கடைக்கு சோதனைக்காக சென்றபோது, கடையின் ஊழியர்கள் ஹோட்டலை பூட்டிவிட்டு சென்ற சூழலில், கடைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்ட குடோனிற்கு அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்த சென்றனர்.

அப்போது ஊழியர்கள் அதையும் பூட்டி விட்டு சென்றதால், அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் காத்திருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர் செல்வி மற்றும் செங்கோட்டை போலீசார் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரஹ்மத் புரோட்டோ கடையின் குடோனில் உள்ள இரண்டு கதவிற்கு பூட்டுக்கு மேல் பூட்டு போட்டு சீல் வைத்தனர். பிரானூர் பார்டரில் பிரபல புரோட்டாக் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாலை அதிகாரிகள் முன்னிலையில் கடை குடோன் சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது அங்கு 200 கிலோ மாமிசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். மேலும் இதுபோன்று கெட்டுப் போன உணவு பொருட்களை இங்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News