தோரணமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தோரணமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது

Update: 2022-08-03 10:15 GMT

தென்காசி மாவட்டம், கடையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ தோரணமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது

தோரணமலை முருகன் கோவிலில் ஆடி 18ம் பெருக்கு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ தோரணமலை முருகன் கோவில் .இந்தக் கோவில் அகஸ்தியர் மற்றும் தேரை சித்தர்கள் வழிபட்ட புராண வரலாற்றுச் சிறப்புடைய ஆலயமாகும்.

இன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு மலையடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பின்ன்ற மலைமீது குகையில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்கு ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. மலைமேல் உள்ள கோவிலில் உள்ள முருகனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தத்தங்கள் எடுத்துவரப்பட்டு கீழே உள்ள உற்சவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனையும்  படி பூஜையும் நடைபெற்றது. விழாவின் சிறப்பு அம்சமாக  பாடகர் கலைமாமணி பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. காலை முதல் நாள் முழுவதும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

Similar News