ஆலங்குளம் அருகே போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பீடி கம்பெனி ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார், ஆலங்குளம் அருகே அவரது கம்பெனி லேபிள்கள் உபயோகித்து போலியாக பீடிகள் தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது, கிடைத்த தகவல் உண்மைதானா என சரவணன் மற்றும் நிறுவன ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு போலி பீடிகள் மற்றும் லேபிள்களை பதுக்கி வைத்திருந்த ராமசுப்பு என்ற நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து சரவணன் சுரண்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையிினர் விசாரணை செய்து மேற்படி போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன்(52) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 56,000 ரூபாய் மதிப்புள்ள போலி பீடிகள் மற்றும் லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது