செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது...! தலைநகர் மக்கள் மகிழ்ச்சி

தமிழக தலைநகர் சென்னையில் கனமழை பெய்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது, தலைநகர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Update: 2022-06-20 06:01 GMT

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி.

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், 23. 36 அடியை எட்டி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. எரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தலைநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது ஒரு புறத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபுறத்தில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட பேரிடர் போல நிகழ்ந்து விடுமோ? என்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News