நீலகிரி ஆட்சியர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
நீலகிரி மாவட்டம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.;
நீலகிரி மாவட்டம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தனது உடல் வெப்பநிலை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டு நோய் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் . பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக அரசு தெரிவித்துள்ள படி நீலகிரி மாவட்டத்தில் 16, 01 ,2021 அன்று தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்காக முன் களப்பணியாளர்கள் மருத்துவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளிட்ட 4 ஆயிரத்து 800 நபர்கள் கோவிஸ் இணையதளத்தில் பதிவு செய்தார்கள் இதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .
இரண்டாம் கட்டமாக வருவாய்த்துறை ,காவல்துறை, மற்றும் உள்ளாட்சித்துறை சார்ந்த முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 4000 க்கும் மேற்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்திய நபர்களுக்கு எதிர்வரும் 16. 2 .2021அன்று இரண்டாம் டோஸ் செலுத்தப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.