நாமக்கல் அருகே தொழிலாளி கொலை: 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு

நாமக்கல் அருகே தொழிலாளி கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-12-18 11:00 GMT

பைல் படம்.

நாமக்கல் அருகே, சண்டையை விலக்கவந்த போது, வெட்டுப்பட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில், 17 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரகூரைச் சேர்ந்தவர் தென்னவன் (20). இவர் தனது 17 வயது தம்பியுடன், நாமக்கல்லில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 11 நாட்களுக்கு முன்பு, இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தம்பி குடிபோதையில் இருந்துள்ளார்.

இதனை தென்னவன் கண்டித்ததால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது, அரிவாளை எடுத்துக்கொண்டு அண்ணனை வெட்டுவதற்காக தம்பி பாய்ந்துள்ளார். அதனைக்கண்டு அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (45) என்பவர் வழிமறித்து, சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன், தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ராஜா படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் சிறுவன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராஜா. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, எருமப்ப்டி போலீசார், சிறுவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News