குடிநீர் வசதி கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டரிடம் மனு

நாமக்கல் அருகே சின்னத்தளிகை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

Update: 2022-05-10 03:30 GMT

சின்னத்தளிகை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வசதி கேட்டு மனு கொடுப்பதற்காக, நாமக்கல் கலெக்டர் அலவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்தனர்.

நாமக்கல் அருகே சின்னத்தளிகை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்துள்ள மனுவில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை பஞ்சாயத்தில் சின்னதளிகை கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பஞ்சாயத்து மூலம் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் கிணறுகள் ஏற்கனவே பழுதடைந்துவிட்டன.

ஜேடர்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய குடிநீரும் கடந்த 2 மாதங்களாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் தனியார் விவசாய தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் போதி அளவு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 2020-2021-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் தளிகை பஞ்சாயத்திற்கு, ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் குடிநீர் தேவைக்கு ஒதுக்கப்பட்டும், அந்த பணி முடிந்து இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடத்து சின்னதளிகை கிராமத்திற்க சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

Tags:    

Similar News