நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் முகாம் நடைபெறும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-18 06:15 GMT

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு உத்தரவின்பேரில், பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை சார்பில், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வகையில், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நாளை 19ம் தேதி வெள்ளிக்கிழமை கீழ்க்காணும் கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நாமக்கல் தாலுக்காவில் நாமக்கல், காதப்பள்ளி, கோனூர், ஏளுர் கிராமங்களிலும், சேந்தமங்கலம் தாலுக்காவில் சிவநாய்க்கன்பட்டி, திருமலைப்பட்டி, கோனாணூர், ஆகிய கிராமங்களிலும், ராசிபுரம் தாலுக்காவில் பட்டணம், தொப்பபட்டி, அக்கரைப்பட்டி, பெரப்பன்சோலை ஆகிய கிராமங்களிலும், மோகனூர் தாலுக்காவில் இடும்பன்குளம், ஏ.மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களிலும், திருச்செங்கோடு தாலுக்காவில் பட்லுர், மானத்தி, கருமனூர், முஞ்சனூர், இலுப்புலி, கருவேப்பம்பட்டி ஆகிய கிராமங்களிலும், பரமத்தி வேலூர் தாலுக்காவில் பில்லூர், நல்லூர், கோப்பணம்பாளையம், தேவணம்பாளையம் ஆகிய கிராமங்களிலும், குமாரபாளையம் தாலுக்காவில் களியனூர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய கிராமங்களிலும் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி, தங்களுடைய பட்டா மாறுதல் சம்மந்தமான கோரிக்கைகைளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News