நாமக்கல்லில் நாளைமுதல் வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி மார்க்கெட்

நாமக்கல் நகராட்சியில், காய்கறி மொத்த மார்க்கெட் இடத்தை கலெக்டர், எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2021-07-10 11:15 GMT

நாமக்கல் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் செயல்பட உள்ள வாரச்சந்தை வளாகத்தை,  கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்  ஆய்வு செய்தனர்.

நாமக்கல் நகராட்சி, திருச்செங்கோடு ரோட்டில், வாரச்சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட், கொரோனா ஊரடங்கால் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் மொத்த விற்பனை மார்க்கெட்,  11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வாரச்சந்தை வளாகத்தில் செயல்பட உள்ளது.

இதையொட்டி மார்க்கெட் அமைய உள்ள இடத்தை நகராட்சிப்பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்து வைத்துள்ளனர். அந்த இடத்தை  கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காய்கறி மார்க்கெட்டிற்கு வருகை தரும் வியாபரிகள்,  கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து, சமூக இடைவெளியில் நடந்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும், 6.5கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள நவீன தினசரி காய்கறி மார்க்கெட் அமைய உள்ள இடத்தையும் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், சுகாதார அலுவலகம் சுகவனம், இன்ஜினியர் ராஜேந்திரன், தாசில்தார் தமிழ்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News