நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் லீவ்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதி அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவ் அளிக்க வேண்டும்.

Update: 2022-02-16 10:30 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதியன்று, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடை நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், அனைத்து தனியார் மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆகிய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய லீவ் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News